

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜனவரி 7) கோவையில் நடக்கிறது. அப்போது பாஜக கூட்டணியில் தேமுதிக நீடிப்பது குறித்து நிர்வாகிகளுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாளை (டிசம்பர் 7) கோயம் புத்தூர், துடியலூர், மேட்டுப்பாளை யம் ரோடு, வெள்ளைகிணறு பிரிவு அருகில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலில் நடக்கிறது.
கட்சியின் தலைமை நிர்வாகி கள், உயர்மட்டக்குழு உறுப்பினர் கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக் கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஆகியோர் மட்டும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டையுடன் வந்து, கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடமிருந்து உடனடி யாக பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வித காரணம் கொண்டும் அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட் டார்கள். செல்போன், கேமரா ஆகியவற்றை உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண் டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தால் ஏற்பட்டுள்ள சாதகம், பாதகம் என்ன? தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கலாமா? என்பது குறித்து விவாதிப்பார். கட்சியின் தற்போதுள்ள நிலவரம், மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கவுள்ளார்’’ என தேமுதிக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.