25 டன் எடை கொண்ட ராட்சத உலை விமானம் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டது

25 டன் எடை கொண்ட ராட்சத உலை விமானம் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்டது
Updated on
1 min read

கடந்த ஞாயிற்றுக் கிழமை, 25 டன் எடையுள்ள உலை ஒன்றை சென்னையில் இருந்து சீனாவில் உள்ள ஷாங்காய்க்கு அனுப்பினர் விமான நிலைய அதிகாரிகள்.

25 டன் எடை கொண்ட ஒரே ஒரு பொருள் முதன் முறையாக அனுப்பீடு செய்யப்படுகிறது.

இதற்கு முன்னால் அதிகபட்சமாய் 70டன் வரை விமானத்தில் சரக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அவையனைத்தும் ஒரே சரக்காக இல்லாமல் பல சரக்குகளின் தொகுதியாக இருந்து வந்தது.

25 டன் எடையுள்ள இந்த மிகப்பெரிய உலை அம்பத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட து

உலை மட்டுமே 25,660 கிலோ எடை கொண்டது. இது தவிர கண்ட்ரோல் பேனல், குளிர்விப்பான் மற்றும் உலைக்கான சில உதிரி பாகங்கள் சேர்ந்து 12 உருப்படிகள் இணைக்கப்பட்டதாக சரக்கை அனுப்பிய ஹெல்மேன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிலிப் ஜேம்ஸ் கூறினார்.

விமான நிலையத்திற்கு சரக்கை எடுத்துச் செல்வதற்காக, சாலை வழியேயான சாத்தியமான பாதைகளை ஆராய்ந்திருக்கின்றனர். அம்பத்தூரில் இருந்து டிசம்பர் 31 அன்று, மதுரவாயல், தாம்பரம் மற்றும் பல்லாவரம் வழியாக விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது 20 டன் எடையுள்ள இரண்டு கிரேன்கள் சரக்கை நகர்த்தி போயிங் 747-இல் ஏற்றப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in