Published : 03 Jan 2015 11:09 AM
Last Updated : 03 Jan 2015 11:09 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலந்தூர், மாதவரத்தில் குடிநீர் தற்காலிக நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலந்தூர், மாதவரம், மணலி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக ளில் குடிநீர் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆலந்தூர் குடிநீர் வழங்கும் நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பிரதானக் குழாய் இணைத்தல் ஆகிய பணிகள் 05.01.2015 காலை 9.00 மணி முதல் 07.01.2015 காலை 9.00 மணி வரை மேற்கொள்ளப்படும்.

இதனால், ஆலந்தூர், ஆதம் பாக்கம், பாலாஜி நகர், பக்தவச் சலம் நகர், நங்கநல்லூர், பழவந் தாங்கல், கண்டோண் மென்ட் பகுதிகள், ராணுவப் பயிற்சி நிலையம், மீனம்பாக்கம், பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாது.

எனவே பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான குடிநீரை முன் கூட்டியே சேமித்து வைக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களுக்கு அவசர தேவை யாக லாரிகளில் குடிநீர் வேண்டு வோர் இளநிலைப் பொறியாளரை 8144930315 என்ற எண்ணிலும், துணைப் பகுதிப் பொறியாளரை 8144930266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது பகுதிப் பொறியாளரை 8144930912 என்ற எண்ணிலும், துணைப் பகுதிப் பொறியாளரை 8144930262 என்ற எண்ணிலும், உதவிப் பொறியாளரை 8144930365 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

அதே போன்று மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 06.01.2015 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் ஜனவரி 6-ம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை குடிநீர் வழங்கல் நிறுத்தப்படுகிறது.

இப்பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் வேண்டுவோர் பகுதிப் பொறியாளர்களை 8144930901, 8144930902, 8144930903 என்ற எண்களிலும் மண்டல செயற் பொறியாளரை 8144930400 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x