Published : 04 Jan 2015 11:50 AM
Last Updated : 04 Jan 2015 11:50 AM

தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஏடிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டி ருப்பதாக கடலோர காவல் படை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

குஜராத் அருகே ஆயுதங்களு டன் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்த படகை கப்பல் படையினர் விரட்டியபோது, படகு திடீரென வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 4 தீவிரவாதிகளும் இறந்த தாக கூறப்படுகிறது. கடந்த 31-ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இதையடுத்து கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 1,076 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை உள்ளது. கடலோரங்களில் 52 காவல் நிலையங்கள் உள்ளன. குஜராத்தில் மர்ம படகு எரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலோர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ரோந்துப் பணிகளையும் தீவிரப் படுத்தியுள்ளனர்.

சுமார் 600 மீனவ கிராமங்களிலும் ரகசிய சோதனைகள் நடத்தப்படு கின்றன. பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் கடலோர பகுதி களில் சந்தேகப்படும் வகையில் சுற்றியதாக 200-க்கும் அதிகமான வர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடலுக்குள் சந்தேகப்படும் விதத்தில் படகில் யாராவது வந்தாலோ, கடற்கரை ஓரமாக சுற்றினாலோ உடனே தகவல் கொடுக்கும்படி மீனவர்களிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு கூறும் போது, ‘‘தமிழக கடல் எல்லை முழுவதும் 24 மணி நேர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி, கன்னியா குமரி, ராமேசுவரம் போன்ற முக்கிய கடல் பகுதிகளில் ரோந்துப் பணியுடன் கூடுதல் கண் காணிப்புக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. கடலோர கிராம காவல் நிலையங்கள், மிதவை காவல் நிலையங்கள் அனைத்தும் இணைந்து செயல்பட அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழகம் வழியாக யாரும் ஊடுருவ முடியாத அளவுக்கு கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x