வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு: இந்த ஆண்டு அரசு பணியில் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு: இந்த ஆண்டு அரசு பணியில் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
Updated on
1 min read

இந்த ஆண்டு தமிழக அரசு பணியில் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் அறிவித்தார்.

ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுவார்கள், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வுமுடிவு எப்போது வெளியிடப்படும்? ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2015-16-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் சென்னை யில் நேற்று வெளியிட்டார். அப்போது டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர். தேர்வு கால அட்டவணையை வெளியிட்ட பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2014-15-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 14,252 பேர் தேர்வு செய்யப்பட்டு அரசு வேலையில் சேர பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு (2015-16) 10 ஆயிரத்துக்கும் குறையாமல் காலியிடங்கள் நிரப்பப்படும். தற்போது பின்பற்றப்பட்டு வரும் தேர்வுமுறையில் எவ்வித மாற்றமும் இருக்காது.

2001-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in