அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 10 சிறப்பு குழுக்கள் நியமனம்: விதிமுறை மீறினால் பர்மிட் சஸ்பெண்ட்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 10 சிறப்பு குழுக்கள் நியமனம்: விதிமுறை மீறினால் பர்மிட் சஸ்பெண்ட்
Updated on
1 min read

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல், பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ளிட்டவை குறித்து ஆராய 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் வெளியூ ருக்கு தினந்தோறும் 750-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை வருகிறது. இதற்காக சென்னையிலி ருந்து ஏராளமான மக்கள், அவர்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். ஏற்கெனவே, ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதால் லட்சக்கணக்கான மக்கள் அரசு சிறப்பு பஸ் மற்றும் ஆம்னி பஸ்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிலர் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கி யுள்ளதாக புகார் வந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கு வதால், ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் அதிக கட்டணம் வசூல், அதிக எடை ஏற்றிச் செல்லுதல், பாதுகாப்பு விதிமுறை மீறல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க மொத்தம் 10 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஆர்டிஓ, வாகன ஆய்வாளர் கள் என 5 பேர் இருப்பார்கள். இந்த குழு மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையில் 5 குழுக்களும், அதிகாலை 5 முதல் 8 மணி வரையில் 5 சிறப்பு குழுக்களும் ஆய்வு நடத்தும். மக்கள் 044 - 24794709 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக் கலாம். விதி முறைகளை மீறும் ஆம்னி பஸ்கள் மீது உரிமம் சஸ்பெண்ட் அல்லது ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதால் மக்கள் அரசு சிறப்பு பஸ் மற்றும் ஆம்னி பஸ்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in