

கோவையில் நகைக்கடை ஊழியர்களிடம் 4.5 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் வந்த 4பேர் அரிவாளை காட்டி மிரட்டி தங்கத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர்.
கோவையில் வெங்கடேசனிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் இருவர் சென்னையில் இருந்து தங்கக் கட்டிகள் வாங்கி வந்தனர்.
தங்கக் கட்டிகளை வீட்டில் வைப்பதற்காக காரில் ஊழியருடன் சென்றார் வெங்கடேசன். வீட்டு முன் காரில் இருந்து இறங்கியபோது ஊழியர்களிடம் இருந்த தங்கக் கட்டிகள் பறிக்கப்பட்டன.
காரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த கொள்ளையர்கள்தான் தங்கக் கட்டிகளைப் பறித்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அந்த நான்கு கொள்ளையர்களையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.