Published : 03 Jan 2015 10:59 AM
Last Updated : 03 Jan 2015 10:59 AM

மணல் கடத்தல் அபராதத்தை உயர்த்த வேண்டும்: வாகனங்களை ஏலம் விடவும் விவசாயிகள் வலியுறுத்தல்

மணல் கடத்தலை முழுமையாக ஒழிக்கும் வகையில், அபராதத் தொகையை இரு மடங்கு உயர்த்தி விதிப்பதுடன், மணலை யும் பறிமுதல் செய்ய வேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

2013-ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, கிளியாறு, ஓங்கூர் ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப் படுகைகளிலிருந்து மணல் அள்ள தடை அமலில் உள்ளது. ஆனால், தடையை மீறி லாரி, மாட்டுவண்டி ஆகியவற்றில் மணல் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுவாக, மணல் கடத்த லில் ஈடுபட்டு பிடிபடும் லாரிகளுக்கு ரூ.25,000 மற்றும் அதிலுள்ள கடத்தல் மணலுக்கு 2 யூனிட்டுக்கு ரூ. 1,500 என்று மொத்தம் ரூ. 26,500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதத் தொகையை லாரி உரிமையாளர் செலுத்தியதும் மணலுடன் லாரி விடுவிக்கப்படுகிறது.

மணல் கடத்தலில் ஈடுபடுவோர் அபராதத் தொகையை கட்டத் தயாராக உள்ளதால், மணல் கடத்தும் சம்பவங்கள் அதிகரிக் கிறதே ஒழிய, குறைவதாகத் தெரியவில்லை.

எனவே, கடத்தல் மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் மற்றும் அபராதத் தொகையை இரண்டு மடங்கு உயர்த்தி விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து காஞ்சி மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் நேரு கூறியது: வாகனங்களில் உள்ள கடத்தல் மணலுக்கு அரசு நிர்ணயித்த விலையை யும் மற்றும் அபராதத்தையும் வசூலித்துக் கொண்டு, மண லுடன் வாகனத்தை விடுவிக்கின்ற னர். இதனால், வாகன உரிமை யாளர்கள் கூடுதல் விலைக்கு மணலை விற்பனை செய்து, அபராதமாக செலுத்திய பணத்தை சம்பாதித்துவிடுகின்ற னர். அரசின் இந்த நடவடிக்கை மணல் கடத்தலை தடுப்பதாக இல்லை. எனவே, மணல் கடத் தல் வாகனங்களை பிடிக்கும் போது, அதிலுள்ள மணலை பறிமுதல் செய்து பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பதுடன், அபராதத் தொகையை இரண்டு மடங்கு உயர்த்தி விதிக்க வேண் டும். தொடர் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து பொது ஏலத்தில் விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள் ளோம் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வருவாய்த் துறை வட்டாரங் கள் கூறியதாவது: கடத்த லில் ஈடுபடும் வாகனங்களுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்க லாம். ஆனால், மணலை பறி முதல் செய்ய வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. எனி னும், விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x