Published : 27 Jan 2015 10:00 AM
Last Updated : 27 Jan 2015 10:00 AM

அரசு பொது மருத்துவமனை நடத்திய புற்றுநோய் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை சார்பில் ‘புற்றுநோய் வெல்ல முடியாதது அல்ல’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் பிரிவில் 63, கல்லூரி மாணவர்கள் பிரிவில் 36 மற்றும் பொதுமக்கள் பிரிவில் 125 என மொத்தம் 224 கட்டுரைகள் வந்திருந்தன.

பள்ளி மாணவர்கள் பிரிவில் உடுமலைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் எஸ்.திருமூர்த்தி, கல்லூரி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி சேர்ந்த மாணவி கே.தீபிகா, பொதுமக்கள் பிரிவில் சென்னை எர்ணாவூர் நவஜோதி வித்யாலயா பள்ளி ஆசிரியர் ரீனா கண்ணன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது. இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் தலைமை தாங்கினார். 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை டீன் டாக்டர் விமலா பரிசுகளை வழங்கினார்.

கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. புற்றுநோய் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு டாக்டர்கள் பதில் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x