காவிரி அணை, மீத்தேன் திட்டம்..: மத்திய அரசுக்கு எதிராக போராட வைகோ அழைப்பு

காவிரி அணை, மீத்தேன் திட்டம்..: மத்திய அரசுக்கு எதிராக போராட வைகோ அழைப்பு
Updated on
1 min read

காவிரியின் குறுக்கே புதிய அணைகள், காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற காவிரி பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: காவிரியில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டினால் தமிழகத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி பேருக்கு குடிநீர் கிடைக் காது. 3 கோடி விவசாயிகள் பாதிக் கப்படுவர். மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தினால் காவிரி டெல்டா பேரழிவுக்கு உள்ளாகும்.

இந்தப் பிரச்சினைகளில் தமிழகத் துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. பிரதமரும் மவுனமாக இருக்கிறார். இவற் றுக்காக ஏற்கெனவே பல அமைப்பு கள் போராடி வருகின்றன.

அனைவரையும் ஒருங் கிணைத்து மத்திய அரசுக்கு எதிராக நெருக்கடி தரும் பணியையே நான் செய்கிறேன். ஒட்டுமொத்த தமிழகமும் நெருக்கடி தந்தால்தான் மத்திய அரசு வழிக்கு வரும். எனவே, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேலூர் ஞான சேகரன் பேசும்போது, “இது தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினை. இதில், வைகோவின் முன்முயற்சியைப் பாராட்டுகிறேன். கடும் போராட்டங்களை நடத்த வேண்டும். இங்கு எடுக்கும் முடிவுகளுக்கு எங்கள் கட்சி ஒத்துழைக்கும்” என்றார்.

திமுக அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, “கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரிடம் பேசி, இந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்திருக்க வேண்டும். அது பலனளிக்காத நிலையில் போராட்டம் நடத்துவதே சரியாக இருக்கும்.

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடுவதால், இந்த திட்டத்தையும் கைவிட வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளைப் பரிசீலித்து, போராட்டங்களில் திமுக பங்கெடுத்துக்கொள்ளும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in