தமிழக அரசு செயலிழந்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழக அரசு செயலிழந்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணா மல் அதிமுக அரசு செயலிழந் துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டி னார்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: தமிழகத்தில் கந்துவட்டி படுகொலைகள், கௌரவ கொலைகள் அதிகரித்திருக் கின்றன. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அதிமுக ஆட்சி சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காணவில்லை. அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து பேச முதலிலேயே முத்தரப்பு கமிட்டி அமைத்திருந்தால் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றிருக்காது. மாநில அரசு செயலிழந்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண் ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு அரசும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும், சமூகமும் பொறுப்பு.

மீதேன் திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் தமிழகத்தில் இல்லை. ஆனால் ஆளும் அரசு மௌனம் காக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை. கடந்த 7 மாதகால மோடி ஆட்சியில் இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி நடைபெற்றிருக்கிறது.

கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைப்பதை எதிர்க்கிறோம். சென்னையில் வரும் பிப்ரவரி 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் மாநில மாநாட்டில் இதை எதிர்த்து இயக்கங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக பண்பாட்டின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்றார் அவர்.

உ.வாசுகி

புதுக்கோட்டையில் நேற்று நடந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது:

பிரதமர் மோடி இந்தியாவை முதலாளிகளுக்கான நாடாக மாற்றிவருகிறாரே தவிர, ஏழைகளைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடு மைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மது விற்பனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in