Published : 12 Jan 2015 11:08 AM
Last Updated : 12 Jan 2015 11:08 AM

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது அவசியம்: அமைச்சர் அறிவுறுத்தல்

இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார், மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா.

அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, கண்காட்சியைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

பின்னர், அங்கு நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு ஊர்வலத்தை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அமைச்சர் பேசும்போது, ‘இரு சக்கர வாகன விபத்து களில் தலையில் காயம் ஏற்படு வதால்தான் அதிக உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும்’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம், காஞ்சிபுரம் எம்பி மரகதம் குமரவேல், எம்எல்ஏ-க்கள் வி. சோமசுந்தரம், பா. கணேசன், இரா. பெருமாள், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x