Published : 04 Jan 2015 09:42 AM
Last Updated : 04 Jan 2015 09:42 AM

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல வசதியாக நெல்லை, நாகர்கோவிலுக்கு 22 சிறப்பு ரயில்கள்

பொங்கலையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னை நெல்லை- நாகர்கோவில் இடையே 22 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெல்லையில் இருந்து ஜனவரி 8, 9, 12 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூருக்கும் அதேபோல எழும்பூரில் இருந்து 9, 10 ஆகிய தேதிகளில் நெல்லைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவிலில் இருந்து 11-ம் தேதி சென்னைக்கும், இங்கிருந்து 12-ம் தேதி நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில் விடப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து 13-ம் தேதி நெல்லைக்கு பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலும் நெல்லையில் இருந்து 14-ம் தேதி கரூர், நாமக்கல் வழியாக சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். எழும்பூரில் இருந்து 14-ம் தேதி நெல்லைக்கும், அங்கிருந்து 17-ம் தேதி சென்னைக்கும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயில் விடப்படுகிறது.

எழும்பூரில் இருந்து நெல்லைக்கு 18-ம் தேதி இரவு சிறப்பு விரைவு ரயிலும் அதே நாளில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலும் விடப்படுகிறது. 19-ம் தேதி எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் 20-ம் தேதி எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், அங்கிருந்து 22, 23 ஆகிய தேதிகளில் சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவிலில் இருந்து 25-ம் தேதி மாலை சென்னைக்கும் மறுநாள் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு விரைவு ரயில் செல்கிறது. எழும்பூரில் இருந்து 27-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை செல்லும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (4-ம் தேதி) தொடங்குகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து 23-ம் தேதி நெல்லை செல்லும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலுக்கு 8-ம் தேதியும் எழும்பூரில் இருந்து 24-ம் தேதி இரவு நெல்லை புறப்படும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலுக்கு 9-ம் தேதியும் நெல்லையில் இருந்து 26-ம் தேதி மாலை சென்னை புறப்படும் சிறப்பு விரைவு ரயிலுக்கு 11-ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x