கருணாநிதி - மணிசங்கர் அய்யர் திடீர் சந்திப்பு

கருணாநிதி - மணிசங்கர் அய்யர் திடீர் சந்திப்பு
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஆனால், காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன .

இந்நிலையில், மணிசங்கர் அய்யர் இன்று கருணாநிதியை சந்தித்துப் பேசி இருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in