Published : 05 Jan 2015 10:01 AM
Last Updated : 05 Jan 2015 10:01 AM

மரங்களை அழிப்பது இனப் படுகொலை: பாட்டாலே புத்தி சொல்லும் பள்ளிக்கூட ஆசிரியர்

"மரங்களை அழிப்பதும் இனப் படுகொலைதான். மனிதர்களுக்குச் சமமாக மரங்களைப் போற்ற வேண்டும்" என்கிறார் தமிழாசிரியர் மகேந்திர பாபு. சகாக்களோடு சேர்ந்து இவர் உருவாக்கி இருக் கும் ‘மரமும் மனிதமும்’ என்ற ஒலி குறுந்தகடு மதுரைப் பள்ளிகளில் இப்போது மிகப் பிரபலம்.

மரங்களைக் காத்து சுற்றுச் சூழலை பாதுகாத்தல், மனித நேயம் காத்தல், முதுமையில் பெற் றோரை போற்றிப் பாதுகாத்தல், போதைக்கு அடிமையாகாமல் இருத்தல், இறந்த பிறகும் இறவா மல் இருக்க உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தல் - இத் தனையையும் குழந்தைகளுக்கு அழகான பாடல்களாய் சொல்கிறது இந்த குறுந்தகடு.

மதுரை மாவட்டம் இளமனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் மகேந்திர பாபு. இவரோடு சக ஆசிரியர்கள் சண்முக வேலு, மோசஸ் மங்களராஜ் உள் ளிட்டவர்கள் கைகோத்து இந்த குறுந்தகட்டை உருவாக்கியுள்ள னர். இதில் உள்ள 10 பாடல் களையும் மகேந்திர பாபு எழுதியுள்ளார். 7 ஆசிரியர்கள் பாடல்களைப் பாட, 2 ஆசிரியர்கள் இசையமைத்துள்ளனர். பள்ளிக் குழந்தைகளை ஈர்க்கும் வித மாக இதில் 8 பாடல்களை துள்ளல் இசையில் அழகாக மெட்டமைத்துள்ளனர். குறுந்தகடு உருவாக்கியதற்கான காரணத்தை விவரிக்கிறார் மகேந்திர பாபு..

‘‘பள்ளி ஆண்டு விழாக்களில் பிள்ளைகளை குத்துப்பாட்டுக்கு ஆடவைக்கும் காலம் இது. அதை மாற்றி சமூக விழிப்புணர்வு கொண்ட பாடல்களுக்கு ஆட வேண்டும் என்பது எங்கள் நோக் கம். சுற்றுப்புறச் சூழல், மரங் களைப் பாதுகாப்பது, தாய் தந்தை யைப் போற்றுவது, மனிதநேயம் வளர்ப்பது, உறுப்பு தானத்தை ஊக்குவிப்பது ஆகிய அனைத்தை யும் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகள் மனதில் பதியவைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை வளமாக இருக்கும். மரங்களை அழிப்பது இனப் படு கொலைக்குச் சமம். மனிதர்களுக் குச் சமமாக மரங்களைப் போற்ற வேண்டும். இதையே குறுந்தகட் டில் பாடல்களாகச் சொல்லி இருக் கிறோம்.

இப்போது மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் எங் களது குறுந்தகடு சுழல்கிறது. பிள்ளைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இன்னொரு குறுந்தகடு தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம். மரங்களை அழித்தால் என்ன கேடு வரும் என்று முதல் குறுந்தகட் டில் சொன்னோம். மரம் நடுவதன் மகத்துவத்தை 2-வது குறுந்தகட் டில் சொல்லப்போகிறோம்.

அரசே பல உதவிகள் செய்தும்கூட, பல கிராமங்களில் படிப்பின் மகத்துவம் தெரியாமல் இருக்கின்றனர். அங்கு அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி, குழந்தைகளை பள்ளிக்கூடம் நோக்கி ஈர்ப்பதுதான் 2-வது குறுந்தகட்டின் முக்கிய நோக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x