Published : 19 Apr 2014 10:27 AM
Last Updated : 19 Apr 2014 10:27 AM

நாள்பட்ட வாழ்வியல் நோய் கண்டறியும் இலவச முகாம்: முகப்பேரில் இன்று தொடங்குகிறது

நாள்பட்ட வாழ்வியல் நோய்களை கண்டறிவதற்கான 2 நாள் இலவச முகாம் சென்னையில் ஆரோக்யா சித்த மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை தொடங்குகிறது.

முகாம் குறித்து மருத்துவர் கு.சிவராமன் கூறியதாவது:

வாழ்வியல் நோய்களைப் பொறுத்தவரை, 'வரும் முன் காப்போம்' என்ற அணுகு முறைதான் தாரக மந்திரம். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, ரத்தக் கொழுப்பு, புற்று நோய், நாள்பட்ட மூட்டு நோய்கள் என நம் வயோதிகத்தை வதைக்கும் நலவாழ்வுச் சவால்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும் தடுக்கவும் உதவும் வகையில், இலவச விழிப்புணர்வு முகாம் ஒன்றை ஆரோக்யா சித்த மருத் துவமனை, தமது முகப்பேர் கிளையில் நடத்துகிறது.

இம்முகாமில் சித்த மருத்து வர்கள் குழு, பயனாளிகளை முழுமையாகச் சோதித்து, சித்த மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன், அவர்களது எலும்பு சுண்ணாம்புச் சத்து அடர்வு திறன் (Bone Mass density), அப்போதைய ரத்தச் சர்க்கரை அளவு ஆகியவற்றை இலவசமாகச் சோதிக்கவும் உள்ளது.

ஏப்ரல் 19, 20 (சனி மற்றும் ஞாயிறு) தேதிகளில் முகப்பேர் ஏரித்திட்டத்தில் இயங்கி வரும் ஆரோக்யா சித்த மருத்துவ மனையில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து பயனடைய முன்பதிவு செய்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 43550990 மற்றும் 9865004499. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x