

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிட மக்கள் பாதுகாப்புக் கழக நிறுவனர்- தலைவர் டிராபிக் ராமசாமி உட்பட 6 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய் தனர்.
ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய்தீனி டம் டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கதி ரேசன், சுயேச்சை வேட்பாளர்கள் இ.ஆனந்த், டி.ஆனந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ராம்ஜி நகரை அடுத்த சோழன் நகரில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரனிடம் சட்டக் கல்லூரி மாணவர் கார்த்திக், ராஜபாளையத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்மதன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த இல.கதிரேசன் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, டிராபிக் ராமசாமி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
மாநகர போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் டிராபிக் ராமசாமி செய்தி யாளர்களிடம் பேசும்போது, “இங்கே 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த முக்கிய மான அரசு அதிகாரிகளை ஏற்கெனவே மாற்றியுள்ளனர். ஆனால் 3 ஆண்டுகளைக் கடந்த மாநகர போலீஸ் கமிஷனரை இது வரை மாற்றவில்லை. அவர் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
ஸ்ரீரங்கத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காமல் சட்டத்துக்குப் புறம் பாகச் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால், எடுக்க மறுக்கிறார். எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியதற்கு மறுத்துவிட்டார். அவரை 48 மணி நேரத்தில் பணியிடமாற்றம் செய்யச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பதற் காகவே இப்போது இடைத்தேர்தல் வாய்ப்பு உருவாகியுள்ளது” என்றார்.
ரஜினிக்காக..
ரஜினி ரசிகர் மன்மதன், “ரஜினி அரசியலுக்கு வர வேண் டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டி யிட வேட்புமனு தாக்கல் செய் துள்ளேன்” என்றார்.
13 பேர் மனுத் தாக்கல்
ஏற்கெனவே 7 பேர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்த 6 பேருடன் சேர்த்து இதுவரை மொத்தம் 13 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.