கூடங்குளம் 2-வது அணு உலையில் பிப்.15-க்குள் வெப்பநீர் சோதனை ஓட்டம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் பிப்.15-க்குள் வெப்பநீர் சோதனை ஓட்டம்
Updated on
1 min read

‘கூடங்குளம் 2-வது அணு உலையில் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படும்’ என்று, அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.

கூடங்குளம் அணு உலையை சுற்றி 16 கி.மீ. சுற்றுவட்டார பகுதிக்குள் பேரிடர் ஒத்திகை நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திருநெல்வேலியில் நேற்று ஆர்.எஸ். சுந்தர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘கூடங்குளத்தில் அமைக்கப் பட்டுள்ள 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற் கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அணுஉலை அமைக்கும் பணிகளில் அணுசக்தி கழக பொறியாளர்கள் மற்றும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 2-வது அணுஉலையில் ஆய்வுப்பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின் அணுஉலைக்குள் தற்போதுள்ள மாதிரி எரிபொருள் அகற்றப்பட்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் வைக்கப்படும்.

இங்கு 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைக்க பூர்வாங்க பணிகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in