

நீராவி முருகனின் மற்றொரு கூட் டாளியை சென்னை பாரிமுனையில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் வேலம் என்ற பள்ளி ஆசிரியை யிடம் கடந்த மாதம் 19-ம் தேதி கத்தி முனையில் ஒருவன் கொள்ளை யடித்துவிட்டு, கூட்டாளியுடன் பைக்கில் தப்பினான். கொள்ளைய னைப் பிடிக்க அமைக்கப்பட்ட 10 தனிப்படைகளும் தீவிர விசாரணையில் இறங்கின.
கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த பிரபல கொள்ளையன் நீராவி முருகன். அவனது கூட்டாளியாக பைக் ஓட்டி வந்தது அரிகிருஷ்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளை நடந்த ஒரு வாரத்துக்குள் அரிகிருஷ்ணனை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நீராவி முருகனை தூத்துக்குடியில் கடந்த 26-ம் தேதி இரவு துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
நீராவி முருகன் ஒவ்வொரு முறை கொள்ளைக்குச் செல்லும்போதும் வெவ்வேறு நபர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அப்பாத்துரை என்பவரும் நீராவி முருகனுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரியவந்தது.
சென்னை பாரிமுனையில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர் கடந்த 2 ஆண்டு களுக்கு மேலாக நீராவி முருகனுடன் தொடர்பில் இருந்துள் ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினால், அந்த காலகட்டத்தில் நீராவி முருகன் செய்த குற்றங்கள் பற்றி தெரியவரும் என்று போலீஸார் கூறினர்.