

சென்னை உர ஆலைக்கு நாஃப்தா மானிய நிலுவைத்தொகை உடன டியாக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு பாஜக தேசிய நிர்வாக உறுப்பினர் இல.கணேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை உர தொழிற்சாலை மேலும் 100 நாட்கள் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப் பதற்கு தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை உர ஆலைக்கு மத்திய அரசு வழங்கும் நாஃப்தாவுக்கு மதிப்புக் கூட்டு வரி (வாட்) விலக்கு அளிக்க தயாராக இருப் பதாகவும் ஏற்றுமதி விலைக்கு நாஃப்தாவை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த உர ஆலையில் கடந்த அக்டோபர் முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதால், பணி யாளர்கள் மிகுந்த நிதி நெருக் கடிக்கு உள்ளாகி உள்ளனர். காம்பளக்ஸ் உரங்களை உற்பத்தி செய்ய இயலவில்லை. அதுமட்டுமல்லாமல், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கஷ்டப் பட்டு வங்கிகளின் சிறப்பு ஏற்பாடு களில்தான் தற்போது தொழிலா ளர்களுக்கு சம்பளம், ஒப்பந்தக் காரர்களுக்கு பில் பட்டுவாடா போன்றவை நடந்து வருகின்றன.
இத்தகைய நெருக்கடியான சூழலில், சென்னை உர ஆலைக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவைத்தொகை ரூ.600 கோடியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்பதை அறிந்தேன். எனவே, அந்த ஆலை உற்பத்தியை தொடங்கிடவும், பல்வேறு செலவினங்களை எதிர் கொள்ளவும் மானிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மத்திய உர அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.