Published : 07 Jan 2015 10:43 AM
Last Updated : 07 Jan 2015 10:43 AM

அண்ணாசாலையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய குழு அகற்றம்: போலீஸ் இணை கமிஷனர் அதிரடி நடவடிக்கை

அண்ணாசாலையில் அனுமதி யின்றி படப்பிடிப்பு நடத்திய குழுவி னரால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ‘தி இந்து’ வில் பொதுமக்கள் முறையிட்ட பின், போலீஸார் சம்பவ இடத் துக்கு வந்து படப்பிடிப்பு குழுவை அகற்றினர்.

சென்னை அண்ணா சாலையில் வாலாஜா சாலை, அண்ணா சிலை சந்திப்பு சிக்னலில் சுரங்க நடைபாதை உள்ளது. இந்த வழியே நேற்று மாலை அலுவல கப் பணி முடித்தவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலரும் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

சுமார் 5 மணியளவில் அங்கு அடையாளம் தெரியாத ஒரு குழுவினர், பெரிய கேமராக்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் வந்து திடீரென சுரங்கப்பாதையை அடைத்த வாறு, படப்பிடிப்பு நடத்தத் தொடங் கினர்.

முதலில் சுரங்கப்பாதையின் ஓரமாக இருந்தவர்கள் அண்ணா சாலை நடைபாதையில் பொது மக்களை நடக்கவிடாமல் கேமராவை வைத்து படமெடுத் தனர். இதனால் பொதுமக்கள் வாகனங்களுக்கு மத்தியில் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அங்கிருந்த சிலர் ‘தி இந்து’ தமிழ் அலுவலகத்துக்கு தகவல் அளித்து முறையிட்டனர். உடனடியாக போலீஸ் இணை கமிஷனர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டபோது, இதுபோன்று நெருக்கடி மிகுந்த நேரத்தில் எந்தப் படப்பிடிப்புக்கும் அனுமதி அளிப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸாரை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியிலிருந்து வந்த போலீஸார், விரைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக படப்பிடிப்பு நடத்திய கும்பலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தினாலும், படப்பிடிப்புக் குழுவினர் மன்னிப்பு கேட்டதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் சம்பவ இடத்திலிருந்து திருப்பி அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x