

காணும் பொங்கலன்று பொழுது போக்கு இடங்களுக்கு இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் மூலம் ஒரே நாளில் ரூ.3 கோடி வசூலாகியுள்ளது.
சென்னையில் காணும் பொங்கல் அன்று மெரினா கடற் கரை, தீவுத்திடல் பொருட்காட்சி, வண்டலூர் பூங்காவிற்கு மட்டுமே சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட் டோர் சென்றனர். இது தவிர மாமல்லபுரம், கிண்டி சிறுவர் பூங்கா, புத்தகக் காட்சி ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் வழக்கத்தை விட, கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், காணும் பொங்கலன்று மட்டுமே ரூ.3 கோடி வசூலாகியுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தின் ஏ.சி. பஸ்களை தவிர, மற்ற பஸ்களில் மக்கள் பயணம் செய்யும் வகையில் ரூ.50 என்ற கட்டணத்தில் ஒரு முழு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்த வகையில், வழக்கத்தை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.