Published : 16 Jan 2015 10:37 AM
Last Updated : 16 Jan 2015 10:37 AM

ஆன்-லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ்: 7 மாதங்களில் 31 லட்சம் பேர் பயனடைந்ததாக பதிவுத்துறை அமைச்சர் சம்பத் தகவல்

பதிவுத்துறையின் ஆன்-லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ் பெறும் வசதியை 7 மாதங்களில் 31 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர் என்று பதிவுத்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: பதிவுத்துறை செயல் பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலை மையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அரசு முதன் மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், பதிவுத்துறை தலைவர் சு.முருகய்யா ஆகியோருடன் கூடுதல் பதிவுத்துறை தலைவர் களும் பங்கேற்றனர்.

பதிவுத்துறையில், கடந்த 2013-14-ம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக, ரூ.9,221.98 கோடி நிர்ணயிக்கப்பட்டு ரூ.8,055.74 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

நடப்பு 2014-15-ம் ஆண்டுக்கு வருவாய் இலக்காக ரூ.10,470.18 கோடி நிர்ணயிக்கப்பட்டு, டிசம்பர் 31 முடிய ரூ.5,989.06 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவணப்பதிவு

பின்னர் அமைச்சர் பேசியதாவது: பொதுமக்கள் தங்களது சொத்து குறித்த வில்லங் கத்தை, இலவசமாக இணையவழி தேடுதல் மேற்கொள்ளும் வசதி, கடந்த ஜூன் 11 அன்று தொடங் கப்பட்டது. இதன் மூலம், ஜனவரி 12-ம் தேதி வரை, 31 லட்சத்து 41 ஆயிரத்து 896 வில்லங்க தேடுதல்கள் பொதுமக்களால் இலவசமாக இணையவழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆள்மாறாட்டப் பதிவு மற்றும் போலி ஆவணப்பதிவு ஆகிய வற்றை தடைசெய்யும் நோக்கில், அரசால் வெளியிடப்பட்ட ஆணை களை தவறாது பின்பற்ற வேண்டும்.

மூல ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள், சமீபத்திய வில்லங்கச் சான்றுகள் ஆகியவற்றை பரிசோதித்து, பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆவணப்பதிவு மேற் கொள்ள வேண்டும்.

அதிகாரிகளுக்கு அறிவுரை

அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய அனைத்து அலுவலர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x