Published : 20 Jan 2015 09:45 AM
Last Updated : 20 Jan 2015 09:45 AM

சென்னை மண்டலத்தில் கடந்த ஆண்டு அஞ்சல் நிலையங்கள் மூலம் ரூ.120 கோடிக்கு வர்த்தகம்

கடந்த ஆண்டு சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட அஞ்சல் நிலையங்கள் மூலம், ரூ.120 கோடிக்கு வர்த்தகம் நடை பெற்றுள்ளது என, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக் சாண்டர் தெரி வித்தார்.

கோத்ரேஜ் நிறுவனத்தின் ‘சோட்டா கூல்’ என்ற சிறிய ரக குளிர்சாதனப் பெட்டிகளை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் பேசிய தாவது: அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் துறை தொடர்பான சேவைகள் தவிர, கூடுதலாக நுகர்வோர் பொருட்களும் விற்பனை செய்யப் படுகின்றன. இந்த நடைமுறை தற்போது தொடங்கப்பட்டது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு மலேரியா நோய் தீவிரமாக பரவிய போது, அஞ்சல் நிலையங்களில் அதற்கான தடுப்பு மருந்துகள் விற்கப்பட்டன. தமிழகத்தில் 12 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தற்போது, அஞ்சலகங்களில் தபால்தலை, அஞ்சல் உறை விற்பனை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் 60 சதவீத வருமானமும், மீதி 40 சதவீத வருமானம் நுகர் வோர் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் கிடைத்து வருகிறது. நுகர்வோர் பொருட்களின் விற்பனை வருமானத்தை அதிகரிக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட அஞ்சல் நிலையங்கள் மூலம், ரூ.120 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு ரூ.150 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் கடந்த ஆண்டு ரூ.250 கோடி அளவுக்கு வர்த்தகம் நடை பெற்றுள்ளது. இந்த ஆண்டு ரூ.275 கோடி இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய அஞ்சல் துறை வர்த்தகப் பிரிவு தலைவர் சுபாஷ் பர்மா, கோத்ரேஜ் நிறுவனத்தின் வியாபார வளர்ச்சி அதிகாரி சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x