

அதிமுக அமைப்புத் தேர்தல் தேதிகள் மாற்றியமைக்கப்பட் டுள்ளன. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலால் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக அமைப்புத் தேர்தல் 14 கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தலும் பிறகு அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 30 மாவட்டங்களில் கிளை நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு மற்றும் வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள், மூன்று கட்டங்களாகவும் நடந்து முடிந்துள்ளன.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடக்கவுள்ளதால், 4 முதல் 14–வது கட்டம் வரையிலான அமைப்புத் தேர்தல்கள் புதிய கால அட்டவணைப்படி நடைபெறும். பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை - விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாநகர், தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர்.
மார்ச் 8 முதல் 12 வரை - வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தி, காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கிருஷ்ணகிரி. 1-வது கட்டத்தேர்தல் நடந்த மாவட்டங்களுக்கு மார்ச் 15 முதல் 17 வரையும் 2-வது கட்டத்தேர்தல் நடந்த மாவட்டங்களுக்கு மார்ச் 22 முதல் 24 வரையும் ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.
3-வது கட்டத் தேர்தல் நடந்த மாவட்டங்களுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை, 4-வது கட்டத் தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு ஏப்ரல் 4 முதல் 6 வரை, 5-வது கட்டத் தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.
கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை
மாநகர், மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களுக்கு ஏப்ரல் 15 முதல் 17 வரை மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்.
வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தி, காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாநகர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறகர், நாமக்கல், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு ஏப்ரல் 18 முதல் 20-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பி னர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும்.
புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், டெல்லி மற்றும் அந்தமானுக்கு கிளை, வார்டு, வட்ட நிர்வாகிகள் தேர்தல் ஏப்ரல் 24, 25 தேதிகளிலும் பிற மாநில, மாவட்ட, பொதுக்குழு, தொகுதி, பகுதி, நகர நிர்வாகிகள் தேர்தல் ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.