

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்ததும், சிறிசேனா புதிய அதிபராக சிறிசேனா வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியளிக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
தஞ்சையில் அவர் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறும்போது, “என் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள், ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ராஜபக்சவின் வீழ்ச்சியை கொண்டாடுகிறது. ராஜபக்சவின் செயல்களை தற்போது உலகம் புரிந்து கொள்ளும்.” என்றார் வைகோ
ஆனாலும், சிறிசேனா பற்றி எச்சரிக்கையுடன் கூறிய வைகோ, “சிங்கள பெரும்பான்மைவாதம் என்ற ஒரே நாணயத்தின் இன்னொரு பகுதியே சிறிசேனா, ஆனால் ராஜபக்ச அடைந்த தோல்வி சிறுபான்மையினருக்கு எதிராக கடும் வன்முறைகள் இழைப்பதை தடுக்கும்.” என்று மேலும் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சர்வதேச ஊடகங்களை சிறிசேனா அனுமதிக்க வேண்டும் என்றும், மக்கள் தொகை விவரத்தில் கணக்கு காண்பிக்க தமிழர் பெரும்பான்மை பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றும் நடைமுறையை சிறிசேனா நிறுத்த வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள சிறைகளில் இருந்து தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வலியுறுத்தினார்.
நேபாளில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜபக்சவை ஆதரித்ததன் மூலம் நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் என்று சாடினார்.