

கும்பகோணம் அருகே அண்டக்குடியில் விஷம் குடித்து கரும்பு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
அண்டக்குடியைச் சார்ந்தவர் விவசாயி சம்பந்தம். திருமட்டம்குடி தனியார் சர்க்கரை ஆலை நிலுவைத் தொகை தராததால் விரக்தியில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.
இதனால் பதற்றமான குடும்பத்தினர் சம்பந்தத்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று சிகிச்சைப் பலனின்றி சம்பந்தம் உயிரிழ்ந்தார்.
தனியார் சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை தராததால்தான் சம்பந்தம் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.