Last Updated : 03 Jan, 2015 03:48 PM

 

Published : 03 Jan 2015 03:48 PM
Last Updated : 03 Jan 2015 03:48 PM

இந்தியா சென்றால் அதிர்ச்சிகரமான பிட்ச்கள்.. இங்கோ பவுன்ஸ் இல்லை: ரயான் ஹேரிஸ் வெறுப்பு

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா வழங்கிய பிட்ச்கள் மந்தமாக, பவுன்ஸ் இல்லாமல் இருப்பது வெறுப்பாக உள்ளது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரயான் ஹேரிஸ் கூறியுள்ளார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயான் ஹேரிஸ் இது பற்றி கூறும் போது,

“2 வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்பது சரிதான். மெல்போர்னிலும் ஏறக்குறைய வெற்றி பெற்றிருப்போம். அதனால் பிட்ச்களை முழுதும் விமர்சிப்பது சரியல்ல என்றாலும், கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் போடப்பட்டது போல் பிட்ச்கள் இந்தத் தொடரில் இல்லை.

இத்தகைய பிட்ச்களில் கிரிக்கெட் ஆட்டம் கடினமே. அதற்காக தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் பிட்ச்களைக் கேட்கவில்லை. நாம் இந்தியாவுக்குச் சென்றால் நம்க்குக் கிடைப்பது முழுமுற்றான அதிர்ச்சிகர பிட்ச்களே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இங்கு நல்ல பசுந்தரை ஆட்டக்களங்களை அவர்களுக்கு வழங்குவதே சிறந்ததாகும்.

நடப்பு டெஸ்ட் தொடரில் பிட்ச்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை. ஒரு பவுலராக பிட்சில் கொஞ்சம் புற்களை விட்டுவைப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். எங்களுக்கு தேவை பவுன்ஸ் விக்கெட்டுகள் என்பதை கூறத் தேவையில்லை.

கடந்த ஆஷஸ் தொடரில் பவுன்ஸ் விக்கெட்டுகளில்தான் மிட்செல் ஜான்சன் எழுச்சி பெற்றார். அப்போது சிடில், நான் ஆகியோர் சிறப்பாக செயல் பட முடிந்தது. இந்த முறை பிட்ச்கள் வெறுப்பேற்றுகின்றன என்றே நான் கூறுவேன்.” என்று கூறியுள்ளார் ரயான் ஹேரிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x