தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்கள் ஆலோசனை
Updated on
1 min read

போக்குவரத்துத் துறை அமைச் சருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப் பட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. பின்னர், தொழிற் சங்கங்களை போக்குவரத்து அமைச்சர் அழைத்துப் பேசியதன் அடிப்படையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்காததால் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இருந்தன. சிஐடியு, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடத்தி விவாதித்தனர். பின்னர் தமிழக அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் 11 தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன் மற்றும் போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலக மூத்த அதிகாரிகளுடன் பல்லவன் இல்லத்தில் நேற்று சுமார் 1.30 மணிநேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு தொழிற்சங் கங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘போராட்டம் நடந்தபோது, தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கள், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும், ஊதிய ஒப்பந் தம் தொடர்பாக விரைவில் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று கூறினோம். உரிய நட வடிக்கை எடுப்பதாக நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட் டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in