

சேலத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் சேலம் கருங்கல்பட்டியில் நடந்தது. இதில் கலந்துகொள்ள வந்த பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் உள்ளன. ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜ குறித்தும், பிரதமரைப் பற்றியும் விமர்சனம் செய்துவருகிறார். கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம் செய்யக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். ஏற்கெனவே, ஒரு கட்சி கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக-வை விமர்சித்தபோது, அதை கண்டித்தவர் ராமதாஸ். அவரே தற்போது விமர்சனம் செய்வது நல்லதல்ல.
மணல் கொள்ளையை தடுக்க செல்லும் அதிகாரிகள் மிரட்டப் படுவதோடு, அவர்களை கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபடுவது என்பது மக்கள் மத்தியில் அரசு மீது அதிருப்தி நிலவி வருகிறது.
விவசாயிகளுக்கு சாதகமான மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை சிலர் தவறு ஒதலாக பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன்:
பாமக நிறுவனர் ராமதாஸ் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையிலேயே கூட்டணி அமையும் என்று சில நாட்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில் டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணி குறித்து பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. அதற்கு இன்னும் காலம் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை யாரும் கூட்டணியைவிட்டு வெளியேறக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். கூட்டணி என்பது நீண்ட கால நன்மையை கருதி செயல்படுவது. அது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. இதையும் மீறி தே.ஜ. கூட்டணியிலிருந்து பாமக விலகினாலும் எந்த பின்னடைவும் ஏற்படாது என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன்:
“சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தலைமை குறித்து எங்கள் தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட் டார். விமர்சனங்கள் என்பது சகஜம் தான். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுமென்றே மத்திய அரசை குறை சொல்லி வருகிறார்.
மேலும் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களில் அன்பு மணி ராமதாஸ் மட்டுமே குறைந்த அளவில் நாடாளுமன்றக் கூட்டங் களில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாமகவின் கருத்தையும் மக்கள் பிரச்சினையையும் அன்பு மணி ராமதாஸ் மக்களவையில் பேசலாம்” என்றார்.