

காவிரியில் கர்நாடகம் அணை கட்டு வதையும், மீத்தேன் எரிவாயு திட்டத் தையும் எதிர்த்து தஞ்சையில் 20-ம் தேதி காவிரி நீர் உரிமை பாது காப்புக் குழு கூட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இதில் பங்கேற்க அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்தாண்டையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பத்திரிகையாளர் களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈழத்தமிழர் களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அகற்ற, பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். கூட்டணி பேச்சின் போது, ஈழத் தமிழர் விஷயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தீங்கான செயல்களை செய்யக் கூடாது என்று பாஜக முக்கியத் தலைவர்களிடம் உறுதி வாங்கினேன். ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசு என்ன செய்ததோ அதில் எந்த மாற்றமுமின்றி மோடி அரசு செயல்படுகிறது.
திமுகவில் இருந்து கொலைப் பழியுடன் என்னை வெளியேற்றிய போது, எந்த அளவு அதிர்ச்சி அடைந்தேனோ, அந்த அதிர்ச்சியை ராஜபக்சவை மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைத்தபோது உணர்ந்தேன். பாஜக அரசு தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. காவிரியில் 2 தடுப்பணை களைக் கட்ட கர்நாடகம் முயற்சிக் கிறது. இதனால், தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் நீரின்றி வறண்டு போகும். தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பது மற்றொரு ஆபத்தான திட்டமாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத் தில், 2011-ல் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டது, தமிழர்க ளுக்கு அவர் செய்த துரோக மாகும்.
இந்த திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய மின்றி வறண்டு, உணவுப் பஞ்சம் ஏற்படும். இதுகுறித்து ஆய்வு நடத்த எம்.எஸ்.சுவாமி நாதன் தலை மையில் கமிட்டி அமைக்கப்பட் டுள்ளது. இவர் தனியார் நிறுவனங் களுக்கு ஆதரவான முடிவெடுக்க வாய்ப்புள்ளது என்பதால், அவரது அறிக்கையை ஏற்கக் கூடாது.
இந்த 2 பிரச்சினைகளை மையமாக வைத்து ‘காவிரி நீர் உரிமைப் பாதுகாப்பு குழு’வை எந்த அரசியல் சார்புமின்றி அமைத்துள்ளோம். இதன் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தஞ்சையில் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட், விசிக, பாஜக உள்ளிட்ட அனைத் துக் கட்சிகள் மற்றும் அமைப்பு களின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் மாரத்தான் நிகழ்ச்சி, வரும் 4-ம் தேதி சென்னையில் நடக்கிறது. மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், பெண்கள் தாங் களாகவே களத்தில் இறங்கி மதுக் கடைகளை மூடும் போராட்டம் நடத்துவர். இதற்காக, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மக்கள் பிரச்சினை களை மையப்படுத்தி போராடுகி றோம். எனவே, தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது. அதிமுக, திமுக என எந்தக் கட்சியைப் பற்றியும் தற்போது விமர்சிக்க மாட்டோம். தமிழகக் கட்சிகளுக்குள் பிரிவினையின்றி, மத்திய அரசின் பாரபட்ச போக்கை எதிர்த்து, தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக போராடுவோம்.
இவ்வாறு வைகோ கூறினார்.