Published : 30 Jan 2015 05:13 PM
Last Updated : 30 Jan 2015 05:13 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார் .

''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. திமுக வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்'' என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது . என். ஆனந்த் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x