Published : 04 Jan 2015 10:12 AM
Last Updated : 04 Jan 2015 10:12 AM

தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி ஆசிரம பெண்களுக்கு கவுன்சலிங்: பெங்களூர் மருத்துவக் குழுவினர் 5 மணி நேரம் நடத்தினர்

புதுச்சேரியில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்த பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் பெங்களூர் சிறப்பு மருத்துவக் குழுவினர், 5 மணி நேரம் மனோதத்துவ கவுன்சலிங் வழங்கினர்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகிய 5 சகோதரிகள் வெளி யேற்றப்பட்டனர். இதனால், சகோதரிகள் 5 பேரும் தங்கள் பெற்றோருடன் கடலில் குதித்தனர். 3 பேர் உயிரிழந்தனர். ஹேமலதா, அவரது 2 சகோதரிகள், தந்தை பிரசாத் ஆகிய 4 பேர் மீட்கப்பட்டனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, தற்கொலைக்கு சென்றபோது தன்னை 2 பேர் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா அளித்த புகாரின் பேரில் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஹேமலதா, ஜெயஸ்ரீ, நிவேதிதா, தந்தை பிரசாத் ஆகிய 4 பேருக்கும் மனோ தத்துவ ரீதியாக கவுன்சலிங் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, அவர்களை பெங்க ளூர் சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்துச் செல்லுமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தங்களை வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறி அவர்கள் பெங்களூர் செல்ல மறுத்து விட்டனர். இதை யடுத்து, பெங்களூரில் இருந்து மனோதத்துவ மருத்துவர் பிரதினா மூர்த்தி தலைமையில் சிறப்பு மருத்துவக் குழு வினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் பாலன், புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உளவியல் ஆலோசகர் ஸ்டெல்லா மேரி ஆகியோரும் இணைந்து ஹேமலதா உள்ளிட்ட 4 பேருக்கும் கவுன்சலிங் அளித் தனர். சுமார் 5 மணி நேரம் கவுன்சலிங் நீடித்தது. இதற் கான அறிக்கையை புதுச்சேரி மருத்துவமனைக்கு திங்கள் கிழமை (நாளை) பெங்களூர் சிறப்பு மருத்துவர்கள் அனுப்பி வைப்பர். அதன் பிறகு, 4 பேரையும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x