

சென்னையில் 2000-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு தினம், மற்றும் திருவள்ளுவர் தினத்தன்று இந்தக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். இதன்படி வருகிற 13ம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்களும் மூடப்படும். இதுபோல், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மஹாவீர் ஜெயந்தியன்று மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.