Published : 29 Jan 2015 10:25 AM
Last Updated : 29 Jan 2015 10:25 AM

சித்த மருத்துவர்கள் 5 பேரின் உரிமத்தை சரிபார்க்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர்கள் 5 பேரின் உரிமத்தை சரிபார்க்க சம்பந் தப்பட்ட அதிகாரிக்கு தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை வடபழனியைச் சேர்ந்த எஸ்.பாலச் சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சித்த மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு தீராத நோய்களையும் குணப்படுத்து வதாகச் சொல்லி சித்த மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இவர்கள் பத்திரிகை, தொலைக் காட்சியில் பெரிய அளவில் விளம்பரம் செய்வதால் அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுகின்றனர். பணத்தை இழப்பதுடன் பக்க விளைவுகளாலும் அவதிப்படு கின்றனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவத்துக்கான மத்திய வாரியம் மற்றும் சித்த மருத்துவக் கல்லூரியில் கே.சக்திராஜராஜன், என்.சண்முகம் உள்ளிட்ட 5 பேர் பதிவு செய்யவில்லை. தமிழ்நாடு மருத்துவ பதிவுச் சட்டத்தின் கீழ், இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, தகுதியில்லாதவர்கள் சித்த மருத்துவம் பார்த்து, பொது மக்கள் உயிருடன் விளை யாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர், சித்த மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரிடம் மனு கொடுத்தேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மேற்கண்ட 5 பேரின் தகுதிச் சான்று, பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த வழக்கை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

சித்த மருத்துவர்கள் சிலர் அதற்கான உரிமம் இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். சித்த மருத்துவர்கள் எந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் வருகின்றனர், யார் அவர்களது உரிமத்தை சரிபார்க்க முடியும் என்பது உள்ளிட்ட தகவல் களை நீதிமன்றத்துக்கு தெரிவிக் குமாறு கடந்த 2009-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. துரதிருஷ்ட வசமாக இதுவரை எந்த பதில் மனுவையும் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை.

எனவே, மனுதாரர் குறிப்பிட் டுள்ள 5 சித்த மருத்துவர்களின் உரிமத்தை சரிபார்க்க சம்பந் தப்பட்ட அதிகாரிக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.

இந்த உத்தரவு கிடைத்த 2 வாரங்களுக்குள் அவர் இதைச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி, மனுதாரர் குறிப்பிட்டுள்ள சித்த மருத்துவர்களுக்கு நோட் டீஸ் அனுப்பி, அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் அவர்களது உரிமத்தை சரிபார்க்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக் கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x