Published : 05 Jan 2015 01:33 PM
Last Updated : 05 Jan 2015 01:33 PM

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.62 கோடி: சந்தீப் சக்சேனா தகவல்

ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் சுருக்கமுறை சிறப்புத் திருத்த இறுதிப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.

புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வரும் 25-ம் தேதி வாக்காளர் தினத்தில், வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சந்திப் சக்சேனா கூறும்போது, "தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட 14 லட்சம் வாக்காளர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர், புகைப்படங்களை சரிபார்த்து வாக்காளர் பட்டியல் வெளியிட்டோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x