‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தின் 3-வது சென்னை சர்வதேச குறும்பட விழா: சமூகப் பிரச்சினை படங்களுக்கு முக்கியத்துவம்

‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தின் 3-வது சென்னை சர்வதேச குறும்பட விழா: சமூகப் பிரச்சினை படங்களுக்கு முக்கியத்துவம்
Updated on
1 min read

‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தின் சார்பாக 3-வது சென்னை சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவின் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் குறும் படங்கள் திரையிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் கேரளாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் தீபு, அரங்கவியலாளர் பிரசன்னா ராமசாமி, நடிகை ரோகிணி, நாடக இயக்குநர் பிரீதம் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தின் இயக்குநர் ஆர்.பி.அமுதன் பேசியதாவது: ‘‘இன்றைக்கு வெகுஜன திரைப்படங்களுக்கு மாற்றாக, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை களை மையப்படுத்திய ஆவணப் படங்களையும், குறும்படங்களையும் மக்கள் மத்தியில் திரையிடும் முயற்சிகள் பரவலாக்கப்பட வேண் டிய தேவையிருக்கிறது. 3-வது ஆண்டாக ‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தின் சார்பில் சென்னை சர்வதேச ஆவணப்பட குறும் பட விழாவை கடந்த ஜனவரி 25-ம் தேதி தொடங்கினோம். சென்னையில் 4 மையங் களில் தொடர்ந்து படங்களைத் திரையிட்டு வருகிறோம்.

மனித உரிமைகள், அரசியல், பழங்குடியின இருளர்களுக்கான பிரச்சினைகள், சர்வதேச உறவுகள், பாலியல் தொடர்பான நெருக்கடிகள் உள்ளிட்ட சமூக விஷயங்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஆவணப் படங் களையும் குறும்படங்களையும் திரையிடுவ தோடு, அது குறித்தான விவாதங்களையும் நடத்துகின்றோம். இதுவரை தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி மொழிப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவ்விழாவில், ஜெர்மனைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிப்ரவரி 1-ம் தேதி திருவான்மியூரிலுள்ள பனுவல் புத்தக அரங்கில் இதன் நிறைவு விழா நடைபெறவுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in