

மயிலாடுதுறை நகராட்சி டெண்டரில் பங்கேற்க வந்த திமுக பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கடைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் டெண்டர் எடுக்க வந்தபோது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். டெண்டரில் பங்கேற்க வந்த திமுகவினரை அதிமுக அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏஎஸ்பி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் டெண்டர் நடைபெற்று வருகிறது. புகைப்படம் எடுக்க வந்த செய்தியாளர்களையும் அதிமுகவினர் தாக்க வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.