Published : 31 Jan 2015 09:25 AM
Last Updated : 31 Jan 2015 09:25 AM

சமஸ்கிருதத்தை பாஜக அரசு திணித்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் மூளும்: கி.வீரமணி

சமஸ்கிருதத்தை பா.ஜ.க. அரசு திணித்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் மூளும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

காந்தி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்திருந்த கி.வீரமணி, தமிழ்நாடு ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சமஸ்கிருத திணிப்பின் மூலம் மீண்டும் இந்தித் திணிப்பை நடத்த முற்படுகிறது மத்திய அரசு. அது நடந்தால் மீண்டும் ஒரு மொழிப்போரே உண்டாகும். பாபர் மசூதி இடிப்பு காலத்தில் நடந்த வன்முறைகளைவிட தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில்தான் அதிக வன்முறை நடக்கிறது. அதற்குக் காரணம் இந்த அரசின் மதவாத கொள்கைதான். பா.ஜ.க. அரசு நீடித்தால் அமைதி இருக்காது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத் துக்குச் செல்ல மாட்டோம், தி.மு.கவை ஆதரிக்கிறோம். பிரச்சாரத்துக்கு செல்லாத தற்கு காரணம், ஸ்ரீரங்கத்தில் ஜனநாயகம் இல்லை; பணநாயகமே உள்ளது.

இலங்கை அகதிகளை இலங்கைக்கு இப்போது திருப்பி அனுப்பக்கூடாது.

இந்து ராஷ்டிரத்தை அமைப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்வதை இந்த அரசு செய்யத் தயாராகி விட்டது என்பதே இதன் பொருள். அதேசமயம் இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பல குரல்களில் பேசுகின்றனர். இந்த முரண்பாடுகள் பற்றி மோடி கண்டுகொள்வதில்லை. என்று குறிப்பிட்டார் வீரமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x