லண்டனுக்கு ஏற்றுமதியாகும் செங்கரும்புகள்

லண்டனுக்கு ஏற்றுமதியாகும் செங்கரும்புகள்
Updated on
1 min read

இந்தியர்கள் மட்டுமில்லாது வெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களும் பொங்கல் பண்டிகையை தற்போது கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாரம்பரியபடி பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தயாராகிவரும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் செவ்வந்திப் பூ உள்ளிட்டவை திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்படுகின்றன.

தேனி, திண்டுக்கல், கரூர், தஞ்சை, பூண்டி, குளித்தலை மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் விளையும் கரும்பு, ஈரோட்டில் விளையும் மஞ்சள் கொத்து மற்றும் இஞ்சிக் கொத்து, செவ்வந்திப் பூ ஆகியவை சிங்கப்பூர், மலேசியா, குவைத், துபாய், ஓமன் மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

தினந்தோறும் சராசரியாக 15 டன் கரும்புகளும், தலா 1 டன் மஞ்சள் கொத்தும், இஞ்சிக் கொத்தும் ஏற்றுமதி செய்யப்படுவதாக விமான நிலைய சரக்குக் கையாளும் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் சரவணன் என்பவர், திருச்சி விமான நிலையம் மூலம் சிங்கப்பூருக்கு கரும்புகளை அனுப்பிக் கொண்டிருந்தார். அவரிடம் திருச்சியில் இருந்து அனுப்புவதற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, “சென்னை விமான நிலையம் மூலம் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களை அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவதோடு, பொருட்களை அனுப்பும் நடைமுறையில் கெடுபிடி இருப்பதால் திருச்சி விமான நிலையம் மூலம் அனுப்புகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in