Published : 31 Jan 2015 09:24 AM
Last Updated : 31 Jan 2015 09:24 AM

ஜெயந்தி நடராஜன் விலகல்: இளங்கோவன் நன்றி அறிக்கை - சிதம்பரமும் வெளியேற வேண்டும் என சூசகம்

ஜெயந்தி நடராஜன் காங்கிரஸில் இருந்து விலகியதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் கட்சி யிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் சூசகமாக தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அமைச்சரவையில் இருந்து ஏன் விலகினேன் என்று கடந்த 13 மாதங்களாக கூறாமல் இருந்த ஜெயந்தி நடராஜன், இப்போது கூறுவதன் காரணம் என்ன? இது மோடியின் அறிவுரையால் ஏற்பட்டதா? இல்லை மோடியின் பயமுறுத்தலால் ஏற்பட்டதா?

27 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயந்தி நடராஜன், கட்சிக்காக எந்த தொண்டும் செய்தது இல்லை. அவரது குடும்பம் கட்சிக்காக உழைத்தது எவ்வளவு உண்மையோ அதேபோல், 1967-ல் காங்கிரஸ் தோற்றதற்கு அவரது குடும்பமே காரணமாகும்.

இவரையடுத்து இன்னும் ஒருவர் தமது வாரிசோடு (ப.சிதம் பரம், கார்த்தி சிதம்பரம்) வெளி யேறினால் தமிழக காங்கிரஸுக்கு விமோசனம் கிடைக்கும். அமைச்சராக பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்காமல் பயந்து ஓடியது தொண்டர்களுக்கு வேதனையை தந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x