Published : 19 Jan 2015 10:05 AM
Last Updated : 19 Jan 2015 10:05 AM

அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை வழங்காத தனியார் கரும்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம்: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்

மாநில அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை தரமறுக்கும் தனியார் கரும்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளதாவது:

கரும்பு விவசாயிகள் தங்களுக் குரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் கரும்பு விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரைக் கொண்ட முத்தரப்பு கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில் முத்தரப்பு கூட்டமே நடத்தப்படுவதில்லை.

நடப்பு ஆண்டில் கரும்பு அரவைப் பருவம் தொடங்கி பல மாதங்கள் ஆகியும், மாநில அரசு தனது பரிந்துரை விலையை அறிவிக்காமல் இருந்ததால், தனியார் சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,300 முதல் ரூ.2,400 வரை மட்டுமே வழங்கின. மத்திய அரசு அறிவித்தபடி, டன் ஒன்றுக்கு ரூ.2,200 மட்டுமே வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசின் சர்க்கரைத்துறை இயக்குநர் கடிதம் அனுப்பினார்.

கடந்த ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.200 கோடி நிலுவைத்தொகை இன்னும் வழங் கப்படாமல் உள்ளது. கரும்புக் கான இந்தாண்டு கொள்முதல் விலையை முதலில் ரூ.2,200 ஆக அறிவித்த மத்திய அரசு, பின்னர் விவசாயிகளின் கோரிக்கை யையை ஏற்று, ரூ.2,300 ஆக உயர்த்தியுள்ளது. இந்தச் சூழலில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு ஜெயலலிதா அறிவித்த அதே ரூ.2,650-ஐ மீண்டும் அறிவித்துள்ளார்

மத்திய அரசு அறிவித்துள்ளபடி டன்னுக்கு ரூ.2,200 என்ற அளவில் தான் கொள்முதல் செய்வோம். தமிழக அரசு அறிவித்துள்ள 2,650 ரூபாயை தரமுடியாது என்று சர்க்கரை ஆலை நிர்வாகத் தினர் கூறியுள்ளனர். அதேநேரத் தில், ‘தமிழக அரசு உத்தரவை ஏற்க முடியாது என்பது சட்ட விரோதமானது. அப்படி கூறுபவர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கரும்பு விவசாய சங்கத்தினர் கூறியுள் ளனர்.

‘மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, மாநில அரசு நிர்ணயிக்கும் பரிந்துரை விலையை வழங்கா தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கரும்புக்கான கொள் முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,500 ஆக உயர்த்துவதுடன், இதுவரை உள்ள நிலுவைத் தொகையையும் உடனடியாக பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x