

காஞ்சிபுரம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கையுறை சரியான அளவில் இல்லாததால், கையுறையின்றி தொழிலாளர்கள் குப்பை அள்ளும் நிலை உள்ளது. இதனால், அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள வார்டு பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்காக, 196 துப்புரவு தொழிலாளர்களுக்கான நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இவற்றில் 76 பணியிடங் கள் காலியாக உள்ளன. இதனால், 120 துப்புரவு தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு, தினமும் 130 டன் குப்பை அகற்றப்படுகிறது.
இந்நிலையில், குப்பை அகற் றும் பணிகளில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்புக் காக கையுறை மற்றும் காலணிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை சரியான அளவில் இல்லாத தால், வெறும் கையில் குப்பை களை அகற்றி வருகின்றனர். குப்பைகளில் உள்ள உடைந்த கண் ணாடிகள் மற்றும் இரும்பு பொருட் களினால் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, துப்புரவு தொழி லாளர்கள் சிலர் கூறியதாவது: நகராட்சி நிர்வாகத்தில் வழங்கப் படும் பாதுகாப்பு கையுறை சரி யான அளவில் இல்லாததால் பயன் படுத்த முடியவில்லை.பாதுகாப் பான காலணிகள் இல்லாததால், குப்பைகள் மீது ஏறும்போது கை மற்றும் கால்களில் காயம் ஏற்படுகிறது. எனவே, எங்களுக்கு தேவையான அளவுகளில் பாது காப்பு கையுறைகளை வழங்கி னால் நன்றாக இருக்கும் என்றனர்.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் கூறியதாவது: துப்புரவு தொழிலாளர்களுக்கு சரி யான அளவில் பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவு தொழிலாளர்கள் கையுறைகளை பயன்படுத்த முன்வருதில்லை என தெரிகிறது. கையுறை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.