சென்னையில் 9 இடங்களில் அம்மா சிமென்ட்: மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னையில் 9 இடங்களில் அம்மா சிமென்ட்: மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

சென்னையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் ஒன்பது கிடங்குகளில் அம்மா சிமென்ட் இருப்பு வைக்கப்பட்டுள் ளது. பொதுமக்கள் விண்ணப்பம் செய்து இவற்றை பெற்றுக்கொள்ள லாம் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் அம்மா சிமென்ட் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத் தின் மூலம் குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 750 சிமென்ட் மூட்டைகளைப் பெற முடியும். ஒரு மூட்டையின் விலை ரூ.190 ஆகும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்துடன், அங்கீகரிக்கப்பட்ட வீடு கட்டும் வரைபடம் அல்லது பகுதி வருவாய் ஆய்வாளரிடம் பெற்ற சான்றிதழ் மற்றும் தேவையான சிமென்ட் மூட்டையின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு Tamil Nadu Cements Corporation Limited என்ற பெயரில் வரைவோலை (DD) எடுத்து சம்பந்தப்பட்ட கிடங்கு பொறுப்பாளரிடம் கொடுக்க வேண் டும். பதிவு செய்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப்படி சிமென்ட் மூட்டைகள் வழங்கப் படும்.

அம்மா சிமென்ட் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்குகளின் விவரம் வருமாறு: அண்ணாநகரில் 2 கிடங்குகள் - எண் 40, 6-வது தெரு (ரவுண்டானா அருகில்). தங்கசாலை - எண் 88 பேசின் பிரிட்ஜ் சாலை. தண்டையார் பேட்டையில் 2 கிடங்குகள் - எண் 1/1,சேஷாசல கிருமாணி தெரு. நந்தனம் - எண் 2, சேமியர்ஸ் ரோடு. கோபாலபுரத்தில் உள்ள கண்ரோன் சுமித் சாலை. விருகம் பாக்கம் - எண் 29/2, ஆற்காடு சாலை. திருவான்மியூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலை (ஒ.எம்.ஆர்.)

மேலும் விவரங்களுக்கு 1800 42522000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in