

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.
இதையடுத்து மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 7-ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9-ம் தேதி ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இதுவரை 68 பெண்கள் உள்பட 758 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 7 பேர் மனு செய்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.