

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், வரும் 01.02.2015 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், கட்சியின் புதிய கிளை அமைப்புகளை ஏற்படுத்துவது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் IJK வின் பணி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது.
எனவே, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் அமைப்புகளின் நிர்வாகிகள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.