Published : 08 Jan 2015 11:31 AM
Last Updated : 08 Jan 2015 11:31 AM

கூரையில் ஓட்டை, சுவர்களில் விரிசல்: இடியும் நிலையில் ஏ.இ.இ.ஓ. அலுவலகம் - பள்ளிப்பட்டில் அச்சத்துடன் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள்

பள்ளிப்பட்டு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப் பட்டில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகக் கட்டிடம் மிகப்பழமையானயானதாகும். எந்த நிலையிலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இந்தக் கட்டிடம் உள்ளதால் இதில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தின மும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘இந்தக் கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு முன் 3 அறைகளுடன் 1500 சதுர அடியில் கட்டப்பட்டதாகும். ஆரம்பத்தில், மதிய உணவு திட்டத்துக்கான சமையல் கூடமாக செயல்பட்ட நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகமாக மாற்றப்பட்டது.

இங்கு இரு தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர், தட்டச்சர், உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 26 தெலுங்கு பள்ளிகள், 60 தமிழ் பள்ளிகள், 11 இரு மொழிபள்ளிகள் உட்பட 101 பள்ளிகளில் பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்கள் பணி நிமித்தமாக அவ்வப்போது அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இத்தனை பேர் கூடும் இந்த கட்டிடம் மிகவும் பலவீனமாக உள்ளது. சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்துள்ளன. சிமென்ட் ஷீட்டால் ஆன மேற்கூரை ஓட்டை விழுந்து சிறுமழை பெய்தால்கூட, அலுவலகத்தினுள் மழை நீர் புகுந்து ஆவணங்கள் வீணாகின்றன. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இதனால், அலுவலக ஊழியர்கள் மட்டுமல்லாமல், அலுவலகத்துக்கு வரும் ஆசிரியர்களும் பீதி யடைந்துள்ளனர்.

எனவே, புதிய கட்டிடம் அமைக்கவோ, வேறு கட்டிடத் துக்கு அலுவலகத்தை மாற்றவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மாவட்டத்தில் 14 உதவித் தொடக்கக் கல்வி அலுவல கங்களில் 6-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் பழமையான கட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன. இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளோம். விரை வில், உரிய தீர்வு கிட்டும். பள்ளிப்பட்டு தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கித்தர பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்துள் ளோம். இடம் கிடைத்தவுடன் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x