

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
குளித்தலை அருகேயுள்ள நெய்தலூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32). இவர், 2013-ம் ஆண்டு அக். 23-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த, 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி மகேந்திரனைக் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.குணசேகரன், குற்றம் சுமத்தப்பட்ட மகேந்திரனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.