

குமரி மாவட்ட கிராமங்களில் தாது மணல் கடத்துவது தொடர்பாக 30பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாது மணல் கடத்தல் குறித்து வழக்கறிஞர் ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:
''முகிலன் குடியிருப்பு, கண்ணன் விளை, இளந்தையடி விளை போன்ற இடங்களில் தாதுமணல் கடத்தப்படுகிறது. சவுக்கு மரம் கடத்தல், மயில் வேட்டை போன்ற சட்ட விரோத செயல்களும் தொடர்ந்து நடக்கின்றன.
இந்த சட்ட விரோத செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். கடத்தலைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பும் அவசியம்'' என அதில் கூறப்பட்டது.
வழக்கறிஞர் ரமேஷ் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய உள்துறை செயலர், ஆட்சியர், டிஜிபி உள்ளிட்ட 30பேர் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.