நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை: தருண் விஜய் எம்.பி. உறுதி

நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை: தருண் விஜய் எம்.பி. உறுதி
Updated on
1 min read

நாடாளுமன்ற வளாகத்தில் திரு வள்ளுவருக்கு சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தருண் விஜய் எம்.பி. தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் திருவள்ளு வர் திருப்பயணம் நேற்று தொடங் கியது.

அப்போது தருண் விஜய் எம்.பி. கூறியது, ‘திருக்குறளின் பெருமையை பரப்பும் வகையில் திருக்குறள் திருப்பயணம் தொடங்கியுள்ளது. இதற்காக இமயமலை அடிவாரத்தில் இருந்து கங்கை நீரும், வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் இருந்து திருமண்ணும் எடுத்து வந்துள்ளோம்.

திருக்குறளின் விளக்கங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. நல்ல பண்பாட்டை யும், மனித நேயத்தையும் வெளிப் படுத்துகிறது. திருக்குறளின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ளவே இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது.

வாரணாசியில் பாரதியார் தங்கியிருந்த வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வைக்கப்படும். பாரதியார் வடஇந்தியா வந்து சாதி கொடுமைகள் ஒழிய பாடுபட்டார். சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒருமைப்பாட்டை காக்கவேண்டும்.

தமிழ் கற்று வருகிறோம்

நானும், எனது குடும்பத்தினரும் தமிழ் கற்று வருகிறோம். திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in